விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை, பிரதமர் நரேந்திரமோடியை தூங்க விடப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிஸ் கட்சி மத்தியபிரதேசம் , சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.இந்நிலையில் மத்தியபிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் முதல்வராகி தன்னுடைய முதல் கையெழுத்துதாக அம்மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.
அதேபோல் சத்தீஸ்கர் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
இந்நிலையில் விவசாய கடன் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை, பிரதமர் நரேந்திரமோடியை தூங்க விடப்போவதில்லை.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய, ஏன் தாமதம் ஆகிறது என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இதனை வலியுறுத்திய போதிலும், பிரதமர் மோடி, இதுவரை, விவசாயிகளின் கடனில், ஒரு ரூபாயை கூட, தள்ளுபடி செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…