இந்தியாவை பாகிஸ்தானாகவோ, தலிபானாகவோ விடமாட்டேன் -மம்தா பானர்ஜி..!
இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது” என மம்தா பானர்ஜி கூறினார்.
சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற நிலையில், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதைதொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பவானிபுர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானாக மாறும் என்று பாஜக கூறியதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
பாஜக பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது. பாஜகவின் கொள்கைகள் மற்றும் அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை. மக்களை மத அடிப்படையில் பிரித்து அரசியல் செய்கிறார்கள். எனது நாடு வலுவாக இருக்க வேண்டும். எனது தாய்நாட்டை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். இந்தியா மற்றொரு தலிபானாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. எனது நாடு பாகிஸ்தானாக மாற நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.