காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட தரமாட்டேன் – மம்தா பானர்ஜி..!

Mamata Banerjee

மேற்கு வங்கத்தில் நான் ஒரு சீட் கூட காங்கிரசுக்கு கொடுக்கப் போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். இதற்கிடையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

இன்று மால்டா பகுதியில் பாத யாத்திரையை மேற்கொண்டார். அப்போது மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி ” பாஜக தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் (அதாவது நாளை) மாநிலத்தின் நிலுவைத் தொகையை  வழங்க கெடு விதித்துள்ளேன்.  நிலுவைத் தொகைகளை தரவில்லை என்றால் பிப்ரவரி 2 முதல் தர்ணாவில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

கிழக்குப் பெருநகரில் உள்ள ரெட் ரோடு பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலை முன்பு நடத்தப்படும் தர்ணாவில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

ஒற்றுமை யாத்திரையில் பதற்றம்.? ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல்.!

தொடர்ந்து பேசிய அவர் மேற்கு வங்க சட்டமன்றத்தில் உங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை என்று காங்கிரஸிடம் சொன்னேன். நாங்கள் உங்களுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைத் தருகிறோம், உங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என கூறினோம். ஆனால் நாங்கள் கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை, காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டனர்.

இப்போது நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை, பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும், தனித்து போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க எங்களால் முடியும்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்