யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் – ராகுல் காந்தி!
யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதியினை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது அமைச்சர்களுடன் சேர்ந்து சென்றுள்ளனர்.
இவர்கள் அங்கு சென்று பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்றுள்ளனர். இருப்பினும் தடையை மீறி மாநிலத்திற்கு நுழைவதாக கூறி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் ராகுல் காந்தியை கீழே தள்ளி விட்டதாகவும் லத்தியால் அடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் அவர்களுடன் சென்ற எம்பிக்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்து கௌதம் புத்த நகரின் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, நான் இந்த உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன் அது போல அநீதிக்கு தலைவணங்கவும் மாட்டேன். என்னுடைய உண்மையை வைத்து பொய்யை வெல்வேன். இதனால் எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய காந்தி ஜெயந்திக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
‘मैं दुनिया में किसी से नहीं डरूंगा… मैं किसी के अन्याय के समक्ष झुकूं नहीं, मैं असत्य को सत्य से जीतूं और असत्य का विरोध करते हुए मैं सभी कष्टों को सह सकूं।’
गाँधी जयंती की शुभकामनाएँ।#GandhiJayanti
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2020