அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. பிரதமராகும் போட்டியிலும் இல்லை – சரத் பவார்

Sharad Pawar

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாக சரத் பவார் கருத்து.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும், ஆனால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்த நாட்டில் நிலையான மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கம் தேவை.

நாட்டின் முனேற்றத்திற்காக உழைக்கும் தலைமையை எதிர்கட்சிகள் விரும்புகிறது.  நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியில் நான் பிரதமர் வேட்பாளராக இல்லை. வரும் மக்களைவைத் தேர்தலில் எதிர்கட்சி தரப்பு வெல்லும் நிலையில், பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணியை எதிர்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம். பொதுமக்கள் எங்களுக்கு பலத்தையும் ஆதரவையும் வழங்கினால், நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்வோம். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து, முன்னோக்கி செல்லும் பாதையை முடிவு செய்ய தயாராக உள்ளன. நாங்கள் ஒரு கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில், அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் நாங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.

எனவே, நானும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதால் பிரதமர் வேட்பாளர் போட்டியிலும் நான் இல்லை என்றார். பிரதமர் வேட்பாளர் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இது குறித்து ஆம் அத்மி, உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் நான் உள்பட சில தலைவர்கள் விவாதிக்க உள்ளாம்.

மேலும், ராகுல் காந்தியின் பாத யாத்திரை, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது ஒரு சிறந்த உதாரணம் என்றார். இதனிடையே, சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சர்த் பவார் அறிவித்தார். இது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்