“இதெல்லாம் மறக்கவே முடியாது”..டொனால்ட் டிரம்ப்..ஒபாமா குறித்து பிரதமர் மோடி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
அமெரிக்காவின் துணிச்சலான நபர் என்றால் டொனால்ட் டிரம்ப் தான் என பிரதமர் மோடி பாராட்டி பேசியுள்ளார்.

டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது பல விஷயங்களை பற்றி பேசினார். உதாரணமாக முன்னாள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை பற்றி நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் ஒருமுறை அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு சென்றபோது டொனால்ட் டிரம்ப் உடன் சேர்ந்து “ஹவ்டி மோடி” என்கிற நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது நடந்த சம்பவங்கள் எனக்கு இன்னுமே நினைவில் இருக்கிறது. அந்த நிகழ்ச்சி முழுவதும் அவர் என்னுடைய உரையை கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பதை கவனித்தேன்.
பிறகு நிகழ்ச்சி முடிந்த பின் அவரும் என்னுடன் வந்து அந்த மைதானம் முழுவதும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பதை சொல்லிக்கொண்டு சுற்றிக்காட்டினார். அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் நீங்கள் போகவேண்டாம் என்று சொல்லியும் கூட டிரம்ப் என் மீது வைத்த அன்பால் என்னுடன் நடந்து வந்து சுற்றி காண்பித்தார். அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வளவு சொல்லும் அவர் என்னுடன் வந்தது அவர் எந்த அளவுக்கு துணிச்சலான மனிதர் என்பதை எனக்கு காட்டியது. அந்த மாதிரி துணிச்சல் உள்ள ஒரே அமெரிக்க நபர் டொனால்ட் டிரம்ப் தான” எனவும் மோடி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் சில விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக பேசிய அவர் ” முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் சுற்றுப்பயணத்திற்காக சென்றபோது அவருடைய வீட்டில் இரவு உணவுக்கு என்னை அழைத்தார்.
ஆனால், நான் சாப்பிடவில்லை..ஏனென்றால் அந்த சமயம் நான் உண்ணவிரதத்தில் இருந்தேன். இதனை கேட்டவுடன் ஒபாமா எனக்கு உணவு வழங்கமுடியாமல் கவலைப்பட்டார். அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அமெரிக்காவுக்கு வரும்போது இப்போது சாப்பிடாததற்கு சேர்த்து இரண்டு மடங்குகள் சாப்பிடவேண்டும் என பாசமாக சொன்னார். இந்த விஷயங்களை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.