உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்தது.
நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பஞ்சாப் மாநிலம், ஹோஷியாப்பூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ராகுல் காந்தியிடம் இருந்து ஒரு வார்த்தை இல்லை, ஒரு ட்வீட் இல்லை.ஹத்ராஸ் விவகாரத்தில் ஓடி ஓடி சென்ற ராகுல் காந்தி,பிரியங்கா காந்தியின் மனசாட்சியை இந்த கொடூரம் கொஞ்சம் கூட அசைத்து பார்க்க வில்லை.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாலியல் சம்பவம் நடைபெற்றால் ராகுல்காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் ராகுலிடம் எந்த கோபமும் இல்லை. எந்த வகையிலும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அரசியலாக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், “உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டவும் ,அவர்கள் குடும்பம் நீதி பெறுவதையும் தடுக்கவில்லை .உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், நான் அந்த மாநிலங்களுக்குச் செல்வேன், நீதி கிடைக்கப் போராடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…