ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை பெற்று தருகிறேன் என கூறியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பணத்தை பெற்று தராததால் அந்த நபர் தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும், அந்த புகாரில் தனது மாமியார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக பயமுறுத்துவதற்காகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவரின் உறவினர் ஒருவர் அடிக்கடி தன்னை துன்புறுத்துவதாகவும், பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், ஒருமுறை அவரிடம் இருந்து சத்தம் எழுப்பி விட்டு தப்பி ஓடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…