பாகிஸ்தானுக்கு ஒருபோதும் செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் – குலாம் நபி
டெல்லி: இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்வதாக மாநிலங்களவையில் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்பிக்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வரும் அவரது பதவி காலம் நிறைவடைவதையொட்டி பிரதமர் மோடி அவரை பாராட்டி பேசினார். குலாம் நபியை குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசும்போதும் கண்கலங்கினார்.
குலாம் நபி ஆசாத் அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் அக்கறை கொண்டவர் என்றும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது என கண்கலங்கியவாரே பிரதமர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆசாத்தின் பதவி பிப்ரவரி 15ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து தனது ஓய்வு உரையில் பேசிய குலாம் நபி, இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்வதாக பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானுக்கு ஒருபோதும் செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என்றும் நாட்டில் இருந்து பயங்கரவாதம் முழுமையாக ஒழிய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த மாநிலங்களவை எம்.பி.க்களில் நானும் விடைபெறுகிறேன் என கண்ணீர்மல்க கூறியுள்ளார். நஜீர் அகமது லாவே மற்றும் முகமது ஃபயாஸ் ஆகியோருடனான எனது பல தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றம் குறித்த அவர்களின் ஆர்வம் குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.