நான் வேடிக்கைக்காக பிறக்கவில்லை.. பிரதமர் மோடி ஆவேசம்.!

PM Modi in Utharkhand

PM Modi : நான் வேடிக்கைக்காக பிறக்கவில்லை என உத்தரகாண்ட் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதை போல உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்திலும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று, உத்தரகாண்டில் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் , முன்னதாக 50-60 ஆண்டுகளை விட கடந்த 10 ஆண்டுகளில் உத்தரகாண்டில் அதிக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்று குறிப்பிட்டார்.

மேலும், ஊழல் செய்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா. ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள். என்னை தவறாக சித்தரிக்கிறார்கள். மோடி வேடிக்கைகளில் ஈடுபட பிறக்கவில்லை. அவர்களால் என்னை தடுக்க முடியாது. ஊழல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் எதிரான நடவடிக்கை இன்னும் தொடரும்.

தம்மை 3வது முறையாக தேர்வு செய்து தன்னை மேலும் வலுப்படுத்துங்கள். தான் மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன். ஊழல்வாதிகள் மீதான எனது நடவடிக்கை மேலும் வலுவடையும்.  எண்ணங்கள் சரியாக இருக்கும் போது வளர்ச்சி தானாக உருவாகும். நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் என உத்தரகாண்ட் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்