உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பானுமதி நாளை உடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் தலைமை குழு தலைவர் சார்பில் நேற்று நீதிபதி பானுமதிக்கு பிரிவு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் கலந்துகொண்டார்.
அப்போது, பேசிய பின்னர் நீதிபதி பானுமதி அவர் தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன்.என்னுடைய இரண்டு வயத்தில் எனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாங்கள் இழப்பீடு கோரி எனது தாயார் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது.
நடைமுறை சிக்கல்கள், போதிய உதவி இல்லாமலும் எங்களால் இழப்பீட்டுத் தொகை பெற முடியவில்லை. நீதிமன்றத்தின் நடைமுறை சிக்கல்களால் நானும், எனது தாயாரும், இரண்டு சகோதரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதுவரை எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இளம் வழக்கறிஞர்கள் நிறைய படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். நீதிபதி பானுமதி 1988-ஆம் ஆண்டு செஷன் நீதிபதியாக தனது பணியை தொடங்கினார். பிறகு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி 2003-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார். இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார்.
இதனால், உச்சநீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதி பானுமதி. அதே போல கொல்லீஜியத்தில் இடம் பெற்ற 2-வது பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…