சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது.
அந்த வகையில், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கனமழையின் காரணமாக நிலக்கரி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளதால் மின்வெட்டுப் பிரச்சினை நிலவுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 5 மணி நேரமும், உத்தரப்பிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில் 8 மணி நேரம் மின்தடை நீடிப்பதாகவும், ஆந்திரா, மகாராஷ்டிரா,. ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் இனிமேல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்படக்கூடிய மின்வெட்டு தொடர்பாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். நாங்கள் மின் சக்தியை சேமித்து வரும் பணியை, எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…