மூன்று ஆண்டுகளுக்கு முன் விஷம் உட்கொண்டேன் – இஸ்ரோ விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து தான் விஷம் உட்கொண்டதாக இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி தபான் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரோவில் தற்பொழுது மூத்த ஆலோசகராக பணியாற்றி வரக்கூடிய திரு. தபான் மிஸ்ரா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது தான் ஆபத்தான ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷத்தை தோசை மற்றும் சட்டினியுடன் உட்கொண்டதாக கூறியுள்ளார்.
அப்பொழுது அவர் அகமதாபாத்தை மையமாக கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விண்வெளி பயன்பட்டு மையத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது உளவு துறையினரின் செயலாக இருக்கலாம் என கூறிய அவர், அதனை உட்கொண்ட பின்பு கடுமையான சுவாச கோளாறு, மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளால் அவதிப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவர்களின் உதவியுடன் உயிர்பிழைத்ததாகவும், இந்திய அரசு இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025