‘அம்மா தூங்குவதாக நினைத்தேன்’ – 2 நாட்கள் இறந்த தாய் மற்றும் சகோதரனின் சடலத்தோடு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…!
இறந்த தனது தாய் மற்றும் சகோதரனுடன் 47 வயது மதிக்கத்தக்க ஸ்ரீலக்ஷ்மி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரண்டு நாட்கள் இருந்துள்ளார்.
பெங்களூரில், ராஜராஜேஸ்வரி நகருக்கு அருகில் உள்ள ஒரு பிளாட்டில் இறந்த தனது தாய் மற்றும் சகோதரனுடன் 47 வயது மதிக்கத்தக்க ஸ்ரீலக்ஷ்மி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அந்த பிளாட்டில் வசிக்கும் பிரவீன் என்பவர் ராஜராஜேஸ்வரி நகர் போலீசாரை அணுகி தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டின் கதவை திறந்த போது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மேலும் அங்கு ஓரளவுக்கு சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் உடலும், ஒரு ஆணின் உடலும் இருந்துள்ளது. ஆர்யாம்பா (65), மற்றும் அவரது மகன் ஹரிஷ், (45) என்பதும் தெரியவந்துள்ளது. ஹரிஷ் ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஆவார்.
இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முதற் கட்டமாக ஏப்ரல் 22-ஆம் தேதி ஹரிஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். தனது தாயும், சகோதரரும் இறந்து விட்டது கூட தன்னால் உணர முடியாத அளவுக்கு ஸ்ரீ லட்சுமி இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி கூறுகையில், ‘அம்மா தூங்குவதாக நான் நினைத்தேன். எனவே அவர்கள் எழுந்திருப்பார் என்று நான் காத்திருந்தேன் என கூறினார்.
அப்பெண்ணிடம், ஏன் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று கேட்டுள்ளனர். ‘என் அம்மா எனக்கும், என் சகோதரருக்கும் சமைக்க பழகினார். அவர் தூங்குவதாக நினைத்தேன் என் அம்மா எழுந்து எந்த உணவையும் தயார் செய்து தரவில்லை. எனவே நான் சாப்பிடவில்லை’ என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பதாக அவரது, தாயார் தரையில் விழுந்துள்ளார். ஹரிஷ் ஆம்புலன்சுக்கு அழைப்புவிடுத்தார் என்றும், அவரது பேச்சில் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து திங்கள்கிழமை காலை ஹரிஷ் 108-ஐ அழைத்ததுள்ளார். இருப்பினும் அவரது அழைப்புக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.