எனது 2 ஆண்டு ஊதியத்தை வழங்குகிறேன்- கவுதம் கம்பீர் அறிவிப்பு
2 ஆண்டு ஊதியத்தை நிவாரணமாக அளிப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
பிரதமரின் அழைப்பை அடுத்து அரசியல கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,ராணுவம்,திரையுலகம்,கிரிக்கெட் வீரர்கள் , தொழிலதிபர்கள் என பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி ஆன கவுதம் கம்பீர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பிரதமர் நிதிக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார் .
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்,அடுத்த 2 ஆண்டுகளுக்கு தனது ஊதியம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
People ask what can their country do for them. The real question is what can you do for your country?
I am donating my 2 year’s salary to #PMCaresFund. You should come forward too! @narendramodi @JPNadda @BJP4Delhi #IndiaFightsCorona
— Gautam Gambhir (@GautamGambhir) April 2, 2020