I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில், முதலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி , சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சந்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பிரதான I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025