“நான் எனது எருமையை பார்க்கவேண்டும்” வினோதமாக விடுப்பு கேட்ட காவலர்..!
போபால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்த பல போலீசார் பல்வேறு காரணங்களுக்காக விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒருவர் வினோதமாக ஒரு விண்ணப்பிக்கடிதம் எழுதியுள்ளார்.
போபால் மாநிலத்தில் எம்.பி.யின் சிறப்பு ஆயுதப்படையின் (SAF) 9 வது ரோந்து பிரிவில் வாகன ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது எம்.பி.யிடம் ஆறு நாட்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டு இரண்டு காரணங்கள் வைத்து ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில் ” ஐயா எனக்கு ஆறு நாட்கள் விடுப்பு கொடுங்கள் என்னுடைய அம்மா உடல் நிலை சரியில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டு”, அதன் பிறகு “நான் வீட்டில் ஒரு எருமை மாடு வைத்திருக்கிறேன்” , நான் எனது எருமை பார்க்கவேண்டும் எனக்கு அந்த எருமை மாடு மிகவும் பிடிக்கும், என் எருமை மாடு ஒரு கன்றையும் பிரசவித்துள்ளது அதனை பார்க்க அங்கு யாரும் இல்லை” என்றும் ஏழுதியுள்ளார்.
இதை எம்.பி கான்ஸ்டபிளிடம் எதற்கு எருமை மேல் இவ்வளவு பாசம் என்று கேட்டதற்கு நான் அந்த எருமை பால் குடித்ததால் தான் எனக்கு உடலில் சக்தி கிடைத்தது, போலீஸ் வேளைக்கு ஆள்சேர்ப்பு போது நான் தேர்வானேன், இப்பொது நான் எனது எருமைக்கு தனது கடனை திரும்பி செலுத்த வேண்டும் எனவும், மேலும் தனது தாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை அதனால் எனக்கு ஆறு நாட்கள் மட்டும் விடுப்பு தருமாறு கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை நிறுவனத்திற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.