நான் என்ன செய்கிறேன்.. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.
PM Modi – நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அவர், நேற்று கல்பாக்கம் ஈனுலை அணு அலை செயல்பாட்டை துவங்கி வைத்து விட்டு சென்னையில் பாஜக மாநாட்டில் பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து இன்று தெலுங்கானா மற்றும் ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார்.
Read More – மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. 2 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 51 விருப்ப மனுக்கள்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அங்கு பேசுகையில், ஒரு நாட்டின் பிரதமராக நான் பெறும் மாத சம்பளத்தை வாய்ப்பு கிடைக்கும் போது அவற்றை மக்களுக்கு நன்கொடையாக வழங்குகி வருகிறேன். முந்தைய அரசாங்கம் இருக்கும்போது அவர்கள் விலை உயர்ந்த பரிசுகளை அதில் வாங்கினர்.
Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!
அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களின் கருப்பு பணத்தை பரிசுகள் மூலம் வெள்ளையாக மாற்றினர். ஆனால், இன்றுவரை, நான் அனைத்து பரிசுகளையும் தோஷகானாவில் (அரசு பரிசு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம்) வைத்துள்ளேன். அதனை ஏலம் விட்டு அதிலிருந்து எவ்வளவு பணம் வந்தாலும், அது கங்கை ஆற்றை சுத்தப்படுத்த முதலீடு செய்யப்படுகிறது.
முந்தைய அரசு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளை தொடங்கினார்கள். அதே நேரத்தில் நாங்கள் ஏழைகள் பயன்பெற ஜன்தன் கணக்குகளை திறக்கவும் அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நான் உதவுகிறேன்.
Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
அவர்கள் ஆடம்பர வீடுகளில் வசிக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் தங்கள் சொந்த வீடுகளில் தூங்குவதை நான் உறுதிசெய்கிறேன். அவர்களின் குழந்தைகள் வளர்ச்சிக்காக இந்தியாவின் வளங்களை விற்றார்கள். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நிஜமாக்க நான் பாடுபடுகிறேன். 140 கோடி இந்தியர்கள் என் குடும்பம் என தெலுங்கானாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.