நான் சன்னியாசியாக தான் விரும்பினேன் : பிரதமர் மோடி ஓபன் டாக்
பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், நடிகர் அக்ஷய்குமாருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன். நான் பிரதமராக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், எனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோபம் வரும் சூழலை நான் ஏற்படுத்திக்கொள்வது இல்லை” என்றும் மோடி கூறியுள்ளார்.
மேலும், பலர் என்னிடம் அதிக நேரம் தூங்குங்கள் என்று கூறினார்கள். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூட கூறினார். ஆனால், எனக்கு 3 – 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் தேவையில்லை” என்றும் மோடி கூறியுள்ளார்.