பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் , நிரூபித்துக் காட்டுவோம் – ப.சிதம்பரம்
பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி ,முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 3 -ஆம் தேதி )தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 381 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடந்தது. இவற்றில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இந்த 381 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 319 இடங்களில் வெற்றி பெற்றார்கள்.ஆனால் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 163 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தார்கள் . ஒரே ஆண்டில் 319 என்பது 163 ஆக குறைந்தது.
பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும். இதனை பீகார் சட்ட மன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
In the 2019 Lok Sabha elections, BJP candidates won 319 out of these 381 assembly segments
In the elections or by-elections in these segments since 2019, BJP candidates won only 163 out of 381 segments
— P. Chidambaram (@PChidambaram_IN) November 1, 2020