டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில் NDA கூட்டணி வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவையில் பேசிய ராகுல் காந்தி, மக்களவையில் மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் எழுப்ப அனுமதிக்கப்படுவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகளை அவையில் பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தவார்கள் என்றும் இதன் மூலம், இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை செய்வதன் மூலம் நீங்கள் (சபாநாயகர் அப்பாவு) உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை இந்தியா கூட்டணி சார்பாகவும் நான் வாழ்த்துகிறேன் என ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்தார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…