எனக்குள்ளும் காஷ்மீர் மக்களின் சிந்தனை ஓட்டம் உள்ளது – ராகுல் காந்தி!
எனக்குள்ளும் காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கம் மற்றும் சிந்தனை ஓட்டம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பின்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், ஸ்ரீநகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்பொழுது, ஜம்மு காஷ்மீர் பெகாஸஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. காஷ்மீர் மீது நேரடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, நாட்டின் மற்ற பகுதிகளிலும் மறைமுகமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதித்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த உண்மை ஊடகங்களில் கூறப்படுவதில்லை. ஊடகங்கள் தங்கள் பணி பறிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எனது குடும்பமும் காஷ்மீரில் தான் வாழ்ந்தது. எனக்குள்ளும் காஷ்மீரிக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனை ஓட்டம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.