காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.காங்கிரஸ் கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முன்வந்ததாகவும் ,அதை காங்கிரஸ் கமிட்டி நிராகரித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் முக்கிய தலைவர்கள் ராகுல் ராஜினாமா தொடர்பாக அவரை சந்தித்து பேசினார்கள்.ராகுல் அவரின் முடிவில் பின்வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஏற்கனவே கடிதம் அளித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார் ராகுல்.அவர் வெளியிட்ட அறிவிப்பில் , நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது.மேலும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்டநாள் தொடர முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…