8 போலீசாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே நேற்று என்கவுன்டர் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.
விபத்தில் காயமடைந்த போலீஸ்காரரின் ஒருவரிடமிருந்து விகாஸ் துபே கைத்துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதனால், போலீசார் நடத்திய என்கவுன்டரில் விகாஸ் துபே உயிழந்தார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், விகாஸ் துபே தாய் சரளா துபேவை (Sarla Dubey) கான்பூர் செல்லுமாறு காவல்துறை கேட்டபோது , அவர், நான் கான்பூருக்கு செல்ல விரும்பவில்லை “விகாஸ்-க்கும் எனக்கு எந்த உறவும் இல்லை” என கூறினார்.
இதற்கு முன் கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தால், காவல்துறை அவனை என்கவுண்டர் செய்யட்டும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…