நான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என விரும்பினால் நான் பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து, தங்களது ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். இதன்பின், அங்கு தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை சிவசேனாவின் சஞ்சய் ராவத் சூசகமாக தெரிவித்திருந்தார்.
அதாவது, மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக சட்டப்பேரவை கலைக்கும் நிலைக்குச் செல்கிறது என தெரிவித்துள்ளார். அவரின் இத்தகைய பதிவு மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், நான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் நான் பதவி விலக தயார். ஆனால், அவர்கள் சூரத்தில் இருந்து அதனை சொல்லக் கூடாது.
என் முகத்துக்கு நேரே சொல்லட்டும். என் மீது குறை இருந்திருந்தால் என்னிடமே நேரடியாகவே கூறியிருக்கலாம். என்னிடம் கூற முடியாமல் சூரத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே உடன் சென்ற மற்ற எம்.எல்.ஏ.க்கள் என்னை தொடர்பு கொண்டு, கட்டாயப்படுத்தி தங்களை அழைத்துச் சென்றதாக கூறினர். அதிகம் பேர் இல்லை ஒரே ஒரு எம்.எல்.ஏ என் முகத்துக்கு நேராக சொல்லட்டும், நான் பதவி விலகி விடுகிறேன். ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன், அதை எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்கு எடுத்து செல்லட்டும், சிவசேனா கட்சித் தலைவர் பதவியைக் கூட விட்டுத்தர தயார் என்றும் கூறியுள்ளார்.
எனக்குப் பின் சிவசேனா கட்சியில் இருந்து இன்னொருவர் இந்த பதவிக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2019ல் 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தபோது, நான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று சரத் பவார் என்னிடம் கூறினார். எனக்கு முன் அனுபவம் கூட இல்லை. ஆனால் நான் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். சரத் பவார் மற்றும் சோனியா காந்தி எனக்கு நிறைய உதவினார்கள், அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…