கர்நாடகாவில் பாஜக வெல்ல வேண்டுமென 1008 தாமரை பூக்கள் கொண்டு தரிசனம் – நடிகை நமிதா

Namitha

சினிமாவில் நடிகையாக வலம்வந்த நடிகை நமிதா தற்போது சினிமாவில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார், சமீபத்தில் கூட கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

இந்நிலையில், நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, கர்நாடக தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என கபாலீஸ்வரர் கோவிலில் 1008 தாமரை பூக்களால் அபிஷேகம் செய்துள்ளார்.

கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு நடிகை நமிதா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். கர்நாடகா மக்கள் பாஜகவிற்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். இதனால் இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும், அதற்காகவே நான் வேண்டியிருக்கிறேன். என்னுடைய பிறந்த நாளை தெருவோரம் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு அளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்