என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளது!

Default Image

என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்?

ஜீவன் சிங் குஷ்வா என்பவர், மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்த வருகிறார். கடந்த வாரம், இவரது வீட்டில் சில பாம்பு குட்டிகள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்ட அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கிருந்து அந்தப் பாம்புகளை வெளியேற்றியுள்ளார்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாரை சாரையாகப் பாம்புகள் படையெடுத்துள்ளன. இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த குஷ்வா, அவரது குடும்பத்தினரை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளன. இவை அனைத்தும் குட்டிகளாக இருப்பதனால், ஜீவன் சிங்கின் வீட்டின் எதாவது ஒரு பகுதியில் பாம்பு முட்டையிட்டுச் சென்றிருக்கலாம் அதன் காரணமாகவே அடுத்தடுத்து இவ்வளவு பாம்புக் குட்டிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வனத்துறையினர் பாம்புகள் முட்டையிடும் இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், பாம்புகள் படையெடுப்பை கெட்ட சகுனமாக கருதுகின்றனர். எனவே அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

மேலும், இதுகுறித்து ஜீவன் சிங் குஷ்வா கூறுகையில், ‘என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்? எனது குடும்பம் இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக சரியாக தூங்கவில்லை.’ என வருத்தம் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்