இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் – சோனியாகநதி
இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காலை 11 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்துவிட்டு வந்த சோனியாகாந்தியிடம், செய்தியாளர் மேடம் ஆர் யூ ஹப்பி! என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக நான் காத்திருந்தேன் என தெரிவித்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியுமே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில், முதல்முறையாக காந்தி – நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.