ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன்பின், பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்ட நிலையில், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி மற்றும் விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினராக தனது சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக பங்களிக்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் வந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த் என கூறியுள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…