எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் – சுரேஷ் கோபி ..!

Suresh Gopi , BJP

சுரேஷ் கோபி: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி 3,93,273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக கேரளா அரசியல் வரலாற்றில் கால்பதித்து பாஜக. இதன் மூலம் அவர் நேற்று (ஜூன்-9) மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றார்.

தற்போது, நேற்று இரவு பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று மலையாள ஓட்டத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால் தற்போது அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் முன்கூட்டியே கூறியிருந்தேன்.

ஆனால், கட்சித் தலைமை கூறியதால் மட்டுமே நேற்று பதவியேற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து என்னை கட்சித் தலைமை விடுவிக்கும் என்று நம்புவதாகவும், தான் எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மலையாள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்