2024 தேர்தல்.? இந்த பட்ஜெட்டில் வாக்குறுதிகள் இருக்கும்… ஆனால் நிறைவேற்றப்படாது.! சித்தராமையா கருத்து.!
2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா விமர்சனம்.
நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அதில் பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இன்று இதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட் 2023க்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல நேற்று மற்றும் இன்றும் கேள்வி நேரம் கிடையாது.
இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாளை பிறகட்சியினர் பட்ஜெட் குறித்த சந்தேகங்களை குறிப்பிடலாம் அதற்கு ஆளுங்கட்சியினர் தங்களது பதில்களை கூறுவார்கள். இந்த பட்ஜெட்டை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த இருக்கும் வேளையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா ஓர் கருத்தை முன் வைத்துள்ளார். அவர் கூறுகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், குறிப்பிடுகையில் இந்த பட்ஜெட் வாக்குறுதிகள் நிறைந்ததாக இருக்கும். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படாது. என்றும், அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும் அத்துடன் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற நோக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாரா? என்றும் பலர் விமர்சித்து உள்ளனர். இல்லை, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இவ்வாறு விமர்சிப்பது இயல்புதான் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.