நான் மத்திய அமைச்சராக இருப்பதால் எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.