“நான் அமைச்சர் எனக்கு கவலை இல்லை” பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் கருத்து..!!
நான் மத்திய அமைச்சராக இருப்பதால் எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
எனினும் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கான உற்பத்தி வரியை குறைக்க மறுத்து விட்டது. ஒரு சில மாநில அரசுகள் மட்டும் வாட் வரியை சற்று குறைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெப்பூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிக்கப்பில்லை. என்னுடைய அமைச்சர் பதவியை இழந்தால் நான் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. விலை உயர்வை குறைப்பது அரசாங்கத்தின் கடமை. மாநில வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம். மத்திய அரசாங்கம் விலை உயர்வை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது’’ எனக் கூறினார்.இவரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் கோவத்தை உண்டாக்கியுள்ளது.
DINASUVADU