சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயிலை மூடிவிட்டு சென்று விடுவேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டராரு ராஜீவராரு தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர்.
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கினர்.இதனால் பெண் செய்தி வாசிப்பாளர் கவிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.
பின்னர் சபரிமலையை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டது.
பின் சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்ற இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெண்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டராரு ராஜீவராரு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பக்தர்களுக்கு நான் துணை நிற்பேன். சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயிலை பூட்டி சாவியை கொடுத்துவிட்டு நானும் கோயிலைவிட்டு இறங்கி சென்றுவிடுவேன் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை நம்பூதிரி கண்டராரு ராஜீவராரு தெரிவித்துள்ளார்.
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…