65 வயதான சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 21 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 22 ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து 65 வயதான சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் ‘விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் நின்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்க வில்லை. இது மிக பெரிய கொடுமை. துன்புறுத்தலை சகித்துக் கொள்வது பாவம், ஒடுக்குவது ஒரு பாவம். சிலர் விவசாயிகளின் உரிமைகளுக்காக கொடுமைக்கு எதிராக நிற்கின்றனர். சிலர் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர். அரசின் கொடுமைக்கு எதிராக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்.’ என்று தனது தற்கொலைக் குறிப்பில் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீக்கிய மதகுருவின் மரணத்திற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…