‘கொலை செஞ்சேன்…’மிச்ச பேமெண்ட் வரல சார்’! புகார் அளித்த கொலையாளி!
வழக்கறிஞர் அஞ்சலி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளி நீரஜ் ஷர்மா கொலை செய்ய கூறியவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு முக்கியமான காரணமே, அந்த கொலை செய்த கொலையாளி கொலை செய்யச் சொன்னவர்கள் மீது புகார் அளித்தது தான். அதாவது, கடந்த ஜூன் 7, 2023 அன்று, வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் யஷ்பால், பாட்டியா, சர்மா, நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை நடந்த சில நாட்களில், சொத்து பிரச்சினை காரணமாக அந்த பெண்ணை கொலை செய்ததும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில், முதலில் அஞ்சலியின் விவாகரத்து பெற்ற கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விசாரணைக்கு எடுத்தனர், ஆனால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அவரது மாமியார் யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியா என்பவருக்கு அந்த வீட்டை விற்றனர், ஆனால் அஞ்சலி வீடு காலி செய்ய மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. எனவே, இவரைத் தீர்த்துக் கட்ட 5 பேர் திட்டம்போட்ட நிலையில், கடந்த ஆண்டு அஞ்சலியை சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவர் உட்பட 5 பேர் கடந்த ஆண்டே கைதும் செய்யப்பட்டனர். கைதான 5 குற்றவாளிகளில் ஒருவரான நீரஜ் சோப்ரா பிணையில் வெளியில் வந்துள்ளார். வெளி வந்த உடனே கொலை செய்யத் தூண்டியவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த கொலையைச் செய்யக் கூறியவர் அவரது மாமியார் யஷ்பால் தான் எனவும், கொலை செய்தால், ரூ.20 லட்சம் தருவதாகக் கூறி, தற்போது வரை ரூ.1 லட்சம் மட்டுமே தந்துள்ளார்கள் மீதி பணத்தைக் கொடுக்கவில்லை .
இந்த வழக்கில் நான், சர்மா முன்னதாகவே கைதான காரணத்தால் மீதமுள்ள ரூ. 19 லட்சத்தை வாங்கமுடியாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சிறையிலிருந்து வெளியை வந்தபிறகு மீதமுள்ள தொகைக்காக அந்த பெண்ணுடைய மாமியாரை அணுகிக் கேட்டேன் ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டனர் எனவும் வேதனையுடன் கொலையாளி புகார் அளித்துள்ளார். காவல்துறைக்குத் தினமும் பல நூதனமான வழக்குகள் வருவதுண்டு ஆனால், இந்த முறை கொலை செய்த கொலையாளியே கொலைக்கான பேமெண்ட் வரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.