கொரோனாவால் உயிரிழந்த தந்தை உடலை நானே அடக்கம் செய்தேன்- மகன் வேதனை!

நொய்டாவில் கொரோனவால் உயிரிழந்த தன் தந்தையை உடலை புதைக்க யாரும் முன்வராததால், மகனே உடலை அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகிய வண்ணமே உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸால் முதியவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் கொரோனா அறிகுறி இருந்தது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனை செய்துள்ளார். ஆனால், அரசு மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.
அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி அவரை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், அடுத்த நாள் காலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவர் உயிரிழந்து 11 மணிநேரம் கழித்தே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த தந்தையில் உடலை கவரில் கட்டி அவர் மகனிடம் ஒப்படைத்தனர். மேலும், தன் தந்தையின் உடலை புதைக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வராததால், என்ன செய்வதென தெரியாமல் சடலத்துடன் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார். இறுதியாக, அவரின் மனைவி பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி தந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் இணைந்து, மகனே தந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார்.