இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை என மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் உங்களில் பலருக்கு என் மீது கோபமும் இருக்கலாம் என தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டார். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. லாக்டவுன் என்பது நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்கிற நடவடிக்கை. நீங்கள் இந்த பொறுமையை இன்னும் பல நாட்களுக்கு வெளிப்படுத்த நேரிடலாம். கொரோனாவில் இருந்து பாதுகாக்க லாக்டவுன் தான் வழி என்றும் இதனை சிலர் புரிந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார். பின்னர் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நிச்சயம் நாம் வெல்வோம். லாக்டவுன் என்பது கடுமையான முடிவாக இருந்தாலும் நமக்கு வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் லாக்டவுனை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…