விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடிஅறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும். அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவர் என தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன; ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…