எஸ்.பி.பி காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்- பினராயி விஜயன் ட்விட்.!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், இசைக்கலைஞர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
Deeply saddened to learn of the passing away of Musician S. P. Balasubrahmanyam. SPB was an inimitable talent who transcended boundaries and genres with his music. His demise is a great loss to our cultural life. Our deepest sympathies to the bereaved family. pic.twitter.com/jnInVRp7TU
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) September 25, 2020