விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் – மோடி ட்வீட்
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரு விமானி, ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யுமாம் என்று தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) அசோக் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக பினராயி விஜயன் மோடியிடம் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் விமான விபத்து குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி கேரள விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் .என் எண்ணங்கள் யாவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் உள்ளது .விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டுவரட்டும் .மேலும் இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசியதாக பதித்துவிட்டுள்ளார்.
Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 7, 2020