‘நான் ஒரு தியாகியின் மகன்’ – தியாகிகளின் அவமானத்தை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன் – ராகுல் காந்தி
ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு, இத்தகைய அவமானம், தியாகத்தின் பொருள் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு ஜாலியன்வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நினைவுச் சின்னத்தில் உள்ள டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த நிலையில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம், அவதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு, இத்தகைய அவமானம், தியாகத்தின் பொருள் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும். நான் ஒரு தியாகியின் மகன். தியாகிகளின் அவமானத்தை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அநாகரிக கொடுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தியாகிகள் இந்த தேசத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை சுதந்திரத்துக்கு போராடாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
जलियाँवाला बाग़ के शहीदों का ऐसा अपमान वही कर सकता है जो शहादत का मतलब नहीं जानता।
मैं एक शहीद का बेटा हूँ- शहीदों का अपमान किसी क़ीमत पर सहन नहीं करूँगा।
हम इस अभद्र क्रूरता के ख़िलाफ़ हैं। pic.twitter.com/3tWgsqc7Lx
— Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2021
Those who didn’t struggle for freedom can’t understand those who did.
— Rahul Gandhi (@RahulGandhi) August 31, 2021