இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது .இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் கம்பீர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஆம் ஆத்மியில் இருந்து ஆதிஷி என்பவர் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பரப்புரையின் போது, தன்னைப்பற்றி அவதூராக கீழ்தரமாக துண்டு பிரச்சாரத்தில் எழுதி கம்பீர் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கம்பீர், அதுபோல துண்டு பிரசாரம் தான் ஏதும் வெளியிடவில்லை.நான் தவறு செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்தால் நான் போட்டியில் இருந்து விலகுகிறேன்,பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் அரசியலைவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் விலகத் தயாராக இருக்கிறாரா? என்று சவால் விடுத்துள்ளார் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் கம்பீர்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…