புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 99 வயதுடைய எழுத்தாளர் புரந்தரே அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். பாபாசாகேப் புரந்தரே அவர்களின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டு சென்று உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வரும் தலைமுறையினருக்கு சத்ரபதி சிவாஜி மஹாராஜா உடன் மேலும் இணைந்திருப்பதற்கு வழிவகை செய்த புரந்தரேவுக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…