பிரதமர் மோடியை கொல்ல போவதாக கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் இளைஞரொருவர் அழைப்பு விடுத்து, பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின் சற்று நேரத்தில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பிரதமர் மோடியை கொல்ல போகிறேன் என்று மிரட்டல் விடுத்து பின் இணைப்பை துண்டித்தார். இதனை எடுத்து, அவரது தொலைபேசி என்னை வைத்து, வட கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் இருந்து அந்த நபர் பேசியது தெரியவந்தது. அந்த நபர் சல்மான் என்ற அர்மான் என்ற 22 வயது இளைஞர் ஆவார்.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் தொலைபேசியில் பேசி நபரின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்தனர். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனை பெற்றுள்ளார்.
சல்மான் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். தொலைபேசியில் பேசுவதற்கு முன் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து போதை மருந்து சாப்பிட்ட பின் தனது தந்தையுடன் தகராறு செய்துவிட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து மாநிலம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் வெளியில் இருக்க விரும்பவில்லை. சிறைக்கு செல்ல விரும்புகிறேன். அதனால் தான் இவ்வாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் விரைவில் உளவுப் பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…