இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன்… 9வது முறையாக பீகார் முதல்வரான நிதிஷ்குமார் பேட்டி..!
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வெற்றிக்கு பின்னர், பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். அகில இந்திய அளவில் ’இந்தியா’ கூட்டணியிலும் அங்கம் வகித்து வந்தார் நிதிஷ்குமார். பதவி ஏற்பு நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்க்கை சந்தித்து பேசிய நிதிஷ்குமார், எங்கு இருந்து சென்றேனோ (NDA) அங்கு மீண்டும் வந்துள்ள்ளேன் என குறிப்பிட்டார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு
அவர் மேலும் கூறுகையில், நான் எப்படி இந்த (மகாத்பந்தன்) ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு வந்தேன், எப்படி பல கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை உருவாக்கினேன் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால், இதில் சில விஷயங்கள் சரியாக நடைபெறவில்லை. எனது கட்சியில் உள்ளவர்களுக்கும் அது சரியாக தோணவில்லை. என்று கூறினார்.
பாஜக தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுள்ளனர்.
மேலும், “நானும் , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தேன். பின்னர் நாங்கள் வெவ்வேறு பாதையில் சென்றோம், ஆனால் இப்போது நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். இந்த கூட்டணி இனி அப்படியே இருக்கும். இன்று எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்பார்கள். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்றும் நிதீஷ் குமார் கூறினார்.
பீகார், முன்னாள் துணை முதல்வரும், லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நிதிஷ்குமார் முடிவு பற்றி கூறுகையில், “நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2024ல் முடிந்துவிடும் என்றும், இனி தான் ஆட்டம் ஆரம்பம் என கூறியது குறித்தும் நிதிஷ்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார் , மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தனது ஜனதா தளம் கட்சி பாடுபடும் என்றும், துணை முதல்வராக தேஜஸ்வி இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது நான் (NDA) முன்னர் இருந்த இடத்திற்கு திரும்பிவிட்டேன். இனி வேறு எங்கும் செல்லும் கேள்விக்கே இடமில்லை என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.