எனக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தர்மசங்கடமாக தான் உள்ளது – நிர்மலா சீதாராமன்!
பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது எனக்கும் தர்மசங்கடமாக தான் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தியாகராய நகரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனக்கு தர்மசங்கடமாக தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்யவண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டும் தான், எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர் எனவும், தன்னால் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.