நானும் பெண் தான்….., இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய நபர் கைது…!
இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோவை சேர்ந்த அப்துல் சமது என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான பக்கம் ஒன்றை உபயோகித்து வந்துள்ளார். இதில் பெண் போல தனது பெயரை வைத்துக்கொண்டு, பல பெண்களிடம் பேசி உரையாடி அவர்களது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இது குறித்து சிறுமி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுமி குற்றம் சாட்டிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான அக்கவுண்ட் உபயோகிப்பது யார் என கண்டறிந்துள்ளனர். குற்றவாளியாகிய அப்துல் சமது மெக்கானிக் ஆக பணியாற்றி வருபவர் எனவும் கூறப்படுகிறது. இவரது போனில் இருந்த பல சிறுமிகளின் விவரங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சமதுவும் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.