நான் ஒரு பாஜக தொண்டன், அதன்பிறகு தான் நாட்டின் பிரதமர்-மோடி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் மோடி தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதியில்,வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அங்கு சென்றார்.அதற்கு முன் காசி விஸ்வநாதன் கோயிலில் வழிபாடும் நடத்தினார் மோடி.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி .தொண்டர்களின் பலம் தான் இவ்வளவு பெரிய வெற்றியை சாத்தியமாக்கியது.நான் ஒரு பாஜக தொண்டன், அதன்பிறகு தான் நாட்டின் பிரதமர்.ஒவ்வொரு பாஜக தொண்டனின் சொல்லுக்கும் தலை வணங்குபவன் நான் என்று பேசினார்.