கையில் பட்டாக்கத்தி வைத்தக்கொண்டு தெருவில் பிறந்தநாள் கச்சேரி…9 பேர் அதிரடி கைது!

Published by
Hema

ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம்.

ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி  கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் பயன்படுத்தி, கூட்டத்தில் இசைக்கு நடனமாடியதால் அவர்கள் மீது ஹபீப்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு கொண்டாட்டத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. இதையடுத்து ஆயுத தண்டனைச் சட்டத்தின் 25 வது பிரிவு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் வீடியோவில், ஒரு பெரிய ஃப்ளெக்ஸியன் பின்னணியில் 2 பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்களின் வாழ்த்துக்களுடன், மற்ற இளைஞர்கள் அவர்கள் இருவரையும் தங்களின் தோள்களில் தூக்கி இசைக்கு நடனம் ஆடுவதைக் காணலாம். மேலும் குறைந்தது 6 பேராவது ஒரு வாள் அல்லது கத்தியை கையில் வைத்து ஆடுவதைக் காணலாம்.

இதுகுறித்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி எம்.நரேந்தர் கூறுகையில் அந்த 9 இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..

INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..

துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…

8 hours ago

அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…

9 hours ago

குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…

10 hours ago

உத்தரகாண்ட் பனிச்சரிவு…உயிரிழப்பு 5-ஆக உயர்வு! மீட்பு பணி தீவிரம்…

உத்தரகாண்டு  : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…

10 hours ago

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார்.  "வேலியன்ட்" (Valiant)…

12 hours ago

சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…

13 hours ago